TNPSC Group 4 exam free coaching class held at chennai: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி மே 24 ஆம் தேதி நடைபெறும் என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இதனால் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே இந்த தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் அறிவித்துள்ளது. குரூப் 4 தோ்வுக்கான இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: இந்தத் தவறுகளை செய்தால் மைனஸ் மார்க்: TNPSC Group 2 தேர்வர்கள் உஷார்!
இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு மே 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044 24615160 தொடா்பு கொள்ளலாம், என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.