வரலாற்று சரிவில் இந்தியா ரூபாயின் மதிப்பு.. பாகிஸ்தான் ரூபாயின் நிலை என்ன தெரியுமா..?

உலக நாடுகளில் பணவீக்கம் தலைவிரித்தாடும் நிலையில் மக்களின் பர்ஸை மட்டும் அல்லாமல் அரசின் கஜானாவையும் காலி செய்து வருகிறது.

இந்த நிலையைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைக் குறைக்க நாணய கொள்கையில் அறிவித்திருந்த அதிகப்படியான வட்டி குறைப்பு, பணப்புழக்கம் ஆகிய தளர்வுகளைக் குறைக்க முடிவு செய்து முதலாவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த துவங்கியது.

இதன் எதிரொலியாக டாலர் மதிப்பு அதிகரிக்க இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ரூபாய் மதிப்பு வேகமாகச் சரிய துவங்கியுள்ளது.

சாமானியர்களை வாட்டி வதைத்த விலைவாசி.. 18 மாதங்களில் இல்லாதளவுக்கு பணவீக்கம் உயர்வு!

 அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 77.69 ரூபாய் வரையில் சரிந்து, புதிய வரலாற்றுச் சரிவை பதிவு செய்து இறக்குமதியாளர்களுக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.

வட்டி விகித உயர்வு

வட்டி விகித உயர்வு

முதலீட்டாளர்கள் வட்டி விகிதங்கள் உயரும் அச்சத்தால் தொடர்ந்து அன்னிய முதலீடுகளை வெளியேற்றி பத்திர முதலீட்டில் குவித்து வருகின்றனர். மேலும் செவ்வாய்க்கிழமை எல்ஐசி ஐபிஓ பட்டியல், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவை புதிய அன்னிய முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டு வரும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்திய ரூபாய்
 

இந்திய ரூபாய்

டாலர் மதிப்பு இந்த வாரம் 20 ஆண்டுக் கால உயர்வுக்குக் கொண்டு சென்றது, ஆனால் ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் கணிசமான சரிவைக் கண்டது, ஆனால் மீண்டும் உயர் துவங்கி. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப இன்று மிகவும் மோசமான அளவான 77.69 ஆக குறைந்தது.

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

இதற்கிடையில் இன்று பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1.51 சதவீதம் சரிந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 196.225 ரூபாயாகப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம், அன்னிய செலாவணி குறைவாக இருக்கும் பட்சத்தில் நாணய மதிப்பின் சரிவு கூடுதல் சுமையை உருவாக்க உள்ளது.

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்

மேலும் இந்தியா ரூபாய்க்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இன்றும் 1.79 சதவீதம் சரிந்து 2.52 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவின் ஒரு ரூபாய் பாகிஸ்தான் நாட்டில் 2.52 ரூபாய்.

கடந்த 5 வருடத்தில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 1.50 ரூபாயில் இருந்து 2.52 ரூபாயாகச் சரிந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Rupee, Pakistan rupee fall to New All-Time Low against USD

Indian Rupee, Pakistan rupee fall to New All-Time Low against USD வரலாற்று சரிவில் இந்தியா, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு..! பாகிஸ்தான் ரூபாயின் நிலை என்ன தெரியுமா..?

Story first published: Tuesday, May 17, 2022, 13:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.