மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம்
நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்த ‛கனா' என்ற படத்தை இயக்கிய இவர் தற்போது உதயநிதி நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற 20ந்தேதி திரைக்கு வருகிறது. கடந்தாண்டு மே மாதம் 17ஆம் தேதி அருண்ராஜாவின் மனைவி இந்துஜா கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் இறந்து ஓராண்டாகிறது.
|
அவரை நினைவு கூறும் வகையில் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு உருக்கமான கவிதை எழுதி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அதில், உடனிரு எப்போதும் உடைந்துடா உண்மையா, உடைத்திட மென்மையாய், ஏதேதோ எண்ணங்கள் என்னை சூழ நீயே அரணாய் எனை ஆள உடனிரு. என்னாலும் பாப்பி என்று மனைவியின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் அருண்ராஜா.