முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டியின் இருந்து காலிமுகத்திடல் வரை நடை பேரணியாகச் சென்றவண்ணம் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அவர் இறந்து இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.