முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட வரை விடுவிப்பது குடியரசுத் தலைவரை முடிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. தண்டனையிலிருந்து விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ள நிலையில், மாநில அரசு அரசை பரிந்துரை செய்திருப்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டது. 20 அம்சங்கள் கொண்ட இந்த பதிலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த வாதங்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன மரபுகளுக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்படி பேரறிவாளனை விடுவிப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 161 என்பது தமிழக அரசு எடுத்த முடிவு. இதில் அரசியல் சாசனத்திற்கு, குற்றவியல் சட்டப் பிரிவுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து உள்ள நிலையில், பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர். 10:30 அளவில் பேரறிவாளன் விடுதலை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்கிறது. மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட நேரிடும் என்று விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.