விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இல்லம் அருகே இனிப்பு வழங்கி பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மே 18) விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது” என்று தெரிவித்தது.


இதையடுத்து வேலூரின் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில் அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது, அவரின் தாயார் அற்புதம்மாள் தனது அன்பு மகனுக்கு இனிப்பு ஊட்டி அவரின் விடுதலையை கொண்டாடினார்.


அவரின் உறவினர்களும் பேரறிவாளனை கட்டிபிடித்து நெகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பேரறிவாளன் இல்லம் அருகே சிறுவர்கள் முதல் பலரும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.