அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் இந்திய வம்சாவளி சிறுவனின் கழுத்தை சக மாணவன் நெறித்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி சிறுவனை, அமெரிக்க சிறுவன் ஒருவன் அங்கிருந்து எழுந்திருக்கும்படி கூறியுள்ளான். அதற்கு இந்திய சிறுவன் மறுக்கவே, அவனது கழுத்தை அமெரிக்க சிறுவன் முழங்கையால் நெரித்துள்ளான். சக மாணவனால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த காணொலி இணையத்தில் வைரல் ஆனது.
இந்த சம்பவத்தை விசாரித்த பள்ளி நிர்வாகம் அமெரிக்க சிறுவனை ஒரு நாள் இடைநீக்கம் செய்தும், தாக்குதலுக்கு உள்ளான இந்திய சிறுவனை 3 நாள் இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டது. சிறுவனின் பெற்றோரை இது மேலும் கொதிப்படையச் செய்ததால் அவர்கள் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளனர்.