'ரஜினிகாந்த் என்ன சொன்னார்?'- 3000 பக்க அறிக்கையை சமர்ப்பித்த பின் அருணா ஜெகதீசன் பேட்டி

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான விசாரணை திருப்திகரமாக இருந்தது’ என விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், இன்று அளித்தார்.
தொடர்ந்து அருணா ஜெகதீசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பொறுத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் அதன் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் விதமாகவும் இருந்தது. அதனால் இந்த விசாரணையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர்.
image
இச்சம்பவம் தொடர்பாக சில பாகங்கள் கொண்ட அறிக்கையை அளித்துள்ளோம். மொத்தம் 3000 பக்கங்கள் கொண்டதாக இந்த அறிக்கை உள்ளது. அவற்றில்
முதல் இரண்டு பாகம் – துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கம்.
மூன்றாவது பாகம் – விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள்.
நான்காவது பாகம் – வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பரிந்துரை செய்துள்ளோம்.
இதையும் படிங்க… தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது ஒருநபர் ஆணையம்
ஐந்தாம் பாகம் – 1,500 வீடியோ ஆவணங்கள் மற்றும் 1,250 சாட்சிகள் 1,500 காவல்துறையினரிடம் மொத்தமாக விசாரணை நடைபெற்றிருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் உள்ளன.
image
இவற்றுடன் பேரணி போன்றவற்றில் ஈடுபடும்போது பொதுமக்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளோம்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில், அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டோம். அவர், தனக்கு இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை எதுவும் தெரியாது எனவும் தொலைக்காட்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை தெரிவித்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.