டெல்லியில் ரோகினி நீதிமன்றத்தில் தீ விபத்து

புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது நீதிபதிகள் அறையின் அருகாமையில் உள்ள ஏர்கண்டிசனரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்துள்ளது. 
 
தகவல் அறிந்தவுடன் ஐந்து  தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தீயை அணைத்தன. இதுவரை பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று டெல்லி தீயணைப்பு துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார். 
மேலும், இந்த விபத்தானது டெல்லியில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட ஐந்தாவது தீ விபத்தாகும்.
இந்த விபத்து குறித்து வழக்கறிஞர் சங்க செயலாளர் வினீத் ஜிந்தால் கூறுகையில்,  “ ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றமும்  சொந்த பராமரிப்பு குழுவை கொண்டுள்ளது. எல்லா உபகரணங்களும் சரியாக செயல்படுகிறதா என்பதை பராமரிக்கும் பொறுப்பு  தீயணைப்புத் துறைக்கு உள்ளது.  
நீதிமன்றங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தீ பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  ஆனால், இது அதிகாரிகளால் கவனிக்கப்படுவதில்லை” என்று  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.