கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் ஆர். லட்சுமணன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். 3 நாட்களாகியும் காய்ச்சல் குணம் அடையாததால் அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினரையும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.