கடைசி நேரத்தில் கைகொடுத்த உலக வங்கி.. இலங்கை மக்கள் நம்மதி..!

கடுமையான பொருளாதார நெருக்கடி, உணவு பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள், மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் எனப் பல பிரச்சனைகளில் தவித்து வந்த இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி செய்வதற்கும், அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காக உலக வங்கி இலங்கைக்குச் சுமார் 160 மில்லியன் டாலர் அளவிலான பிரிட்ஜ் நிதியுதவி அளித்துள்ளது.

உலக வங்கியின் இந்த 160 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே புதன்கிழமை உறுதி செய்தார்.

பொருளாதார வீழ்ச்சியில் தென்னாசிய நாடுகள்.. இலங்கை, நேப்பாள், பாகிஸ்தான்.. அடுத்தது யார்..?!

இலங்கை

இலங்கை

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜனவரி மாதம் முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. சிறிது சிறிதாக வெடித்த மக்கள் போராட்டம் இலங்கை ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ரணில் விக்ரமசிங்கே

ரணில் விக்ரமசிங்கே

பல மோசமான சம்பவங்களுக்குப் பின்பு இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று இருக்கிறார். இவருக்குப் பலர் ஆதரவு தெரிவித்தாலும், பல முக்கியத் தலைவர்கள் இலங்கையில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஒருபக்கம் அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் இதே வேளையில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளின் இருப்பு இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளது.

 

பெட்ரோல், டீசல் இருப்பு
 

பெட்ரோல், டீசல் இருப்பு

இலங்கையில் பொருளாதாரம் சீரடையாத நிலையில் எரிபொருள் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று வெளியான தகவல் படி இலங்கையில் பெட்ரோல், டீசல் இருப்பு 1 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் உலக வங்கி 160 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளித்துள்ளது.

அவசர நிதி தேவை

அவசர நிதி தேவை

விக்கிரமசிங்கே, திங்களன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அத்தியாவசிய இறக்குமதிகளுக்குச் செலுத்த அரசுக்கு அவசரமாக 75 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி தேவை என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தான் உலக வங்கியிடம் 160 மில்லியன் டாலர் தேவை எனக் கூறினார்.

எரிபொருள் இறக்குமதி

எரிபொருள் இறக்குமதி

தற்போது உலக வங்கியிடம் பெற்றுள்ள கடனை எரிபொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்த முடியுமா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என விக்கிரமசிங்கே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 விமானச் சேவைகள் தனியார்மயமாக்கல்

விமானச் சேவைகள் தனியார்மயமாக்கல்

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் 2021-ல் ஶ்ரீலங்கன் விமானச் சேவைக்கு 45 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இலங்கையில் விமானச் சேவைகளை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka receives $160 million financing from World Bank today

Sri Lanka receives $160 million financing from World Bank today கடைசி நேரத்தில் கைகொடுத்த உலக வங்கி.. இலங்கை மக்கள் நம்மதி..!

Story first published: Wednesday, May 18, 2022, 17:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.