’வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தும் நோக்கில் யூட்யூப்பில் வீடியோக்கள்’- போலிசில் புகார்

சமூக வலைதளங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி மனோகரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தும் நோக்கில் அவதூறு பரப்பி வரும் கோவையை சேர்ந்த பாரிசாலன் (எ) தினேஷ்குமார் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறாக பேசி பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வலியுறுத்தியும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் விருதுநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் தலைமையில் மனு அளித்தனர்.
image
மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலை தளங்களில் வீடியோக்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தனர். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தும் நோக்கில் அவதூறு பரப்பும் பாரிசாலன் (எ) தினேஷ்குமார் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.