திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனக்காபல்லி மாவட்டம் நாக்காபல்லி போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். காரில் ஒரு பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது.
அதனை போலீசார் எண்ணி கணக்கிட்டதில் ரூ.3 கோடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் வந்த சீனிவாச ராவ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பணம் கணக்கில் வராததது என்பது தெரியவந்தது. அவர் நிலம் விற்பனை செய்து கொண்டு வந்த பணம் என்று தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் முறையான கணக்கு இல்லாததால் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடியையும், காரையும் போலீசார் கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.