30 பயங்கரவாதிகளை விடுவித்த பாகிஸ்தான் – காரணம் என்ன?

30 தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அரசு 30
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்
(டிடிபி) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது எனவும் முக்கிய பயங்கரவாதிகளாக கருதப்படுபவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் செம ஹேப்பி – கைநிறைய சம்பளம் வரப் போகுது!

இதற்காக, முன்னாள் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக் குழு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் வைத்து, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (டி டி பி) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், பெரும்பாலும் டிடிபி இயக்கம் நடத்திய தாக்குதல்களில் 120 பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.