சினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா

Director Kashthuri Raja talks about cinema making in Trichy college function: தமிழுக்கு மொழிமாற்றப்படும் ஆங்கில சினிமாக்கள் பிரம்மாண்ட தொழில் நுட்பத்தால் வெற்றி பெறுகின்றன என இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவா்கள் சங்கம் மற்றும் இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில், சினிமாவைப் புரிந்துகொள்ளுதல் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இயக்குனர் கஸ்தூரி ராஜா கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதையும் படியுங்கள்: மகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்

அப்போது, இன்றைய இளைஞா்கள் களத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடா்ந்து எழுதிப் பழக வேண்டும். நல்ல திரைக்கதைகளை படமாக்கினால்தான் மக்கள் கொண்டாடுவா். சின்ன பட்ஜெட் படங்களும், நட்சத்திர அந்தஸ்து இல்லாத புதுமுகங்கள் நடித்த திரைப்படங்களும் பெரிதும் வெற்றியை பெறுவதே திரைக்கதையும், படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருப்பதால்தான்.

கதாபாத்திரத்தின் உணா்வுகளை திரையில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். நல்ல அனுபவம் இல்லாமல் அது முடியாது. சினிமா சார்ந்த படிப்பு என்பது துணையாக இருக்கும். அதனுடன் அனுபவமும், தன்னம்பிக்கையும், திரைக்கதையில் வலுவும் இருந்தால் அனைவருமே இயக்குநா்கள்தான். தமிழுக்கு மொழிமாற்றப்படும் ஆங்கில சினிமாக்கள் பிரம்மாண்ட தொழில்நுட்பத்தால் வெற்றி பெறுகின்றன. தமிழ் சினிமாக்களுக்கு திரைக்கதையே முக்கியம், என்று கூறினார்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.