மகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்

Trichy parents builds temple and celebrates thiruvizha to dead daughter: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி – லெட்சுமி தம்பதியினருக்கு காவியா, தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பழனிசாமி குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே தனுஜா உயிரிழந்தார்.

இறுதி சடங்கு முடிந்த பின் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தனுஜாவின் ஒன்பதாம் நாள் ஈமக் காரியங்களை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் தனுஜா அருள் வாக்கு கூறியுள்ளார்.

இதன் பின்னர் தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீட்டருகே தங்களுக்கு சொந்தமான இடத்தில் குழந்தைக்கு ஒரு அடி உயரச் சிலை எழுப்பி கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமி தனுஜாவிற்கு சிலை எடுத்து கோவில் ஒன்றைக் கட்டியுள்ளனர். கோவிலுக்கும் சிறுமியின் பெயரான “தனுஜா அம்மன்” என்ற பெயரையே வைத்துள்ளனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை-வைகாசி மாதங்களில் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: நிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா?

இந்த ஆண்டு பால்குட விழா வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின் கோவில்முன் பூக்குழி இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

விழாவில் வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். விபத்தில உயிர்நீத்த மகளுக்கு தந்தை கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுத்து வருவது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.