பசித்தால் கூட மதிய உணவாக இதையெல்லாம் சாப்பிடாதீங்க..! பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடுமாம்


பெரும்பாலானோர் தினமும் காலையில் வீட்டில் காலை உணவைச் சாப்பிடுகிறார்கள், ஆனால் மதிய உணவுக்கு, வெளியில் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அப்படி நீங்கள் பசிக்காக சாப்பிடும் அந்த உணவுகள்தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு தருபவையாக இருக்கின்றன.

தறபோது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பசித்தால் கூட மதிய உணவாக இதையெல்லாம் சாப்பிடாதீங்க..! பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடுமாம்

  •  தொடர்ச்சியாக எண்ணெயில் பொறித்த மற்றும் வறுத்த உணவுகளை மதிய வெளியில் உட்கொண்டால், செரிமான அமைப்பு பாதிக்கப்படும். 
  •  கடையில் வாங்கக் கூடிய சாண்ட்விச்கள் கெட்டுப்போனவையாக இருக்கலாம் அல்லது அவற்றில் உள்ள தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் வயிற்றுக்குள் சென்றால், உங்கள் உடல்நிலை மோசமாகிவிடும். ஃபுட் பாய்சனும் உண்டாகலாம்.
  •  மதியம் பல சமயங்களில் ஹோட்டலில் கிடைக்கும் பராட்டா, பாஸ்தா, பர்கர் போன்றவற்றை எடுத்து கொள்ள கூடாது.. ஆனால் பாஸ்தா அல்லது பரோட்டாவில் நார்ச்சத்து இல்லை என்பதையும், மாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்களை உட்கொள்வதால் செரிமான பிரச்சனை ஏற்படலாம் .
  • சிலர் மதிய வேளையில் பசி எடுக்கும் போது சாலையோரத்தில் கிடைக்கும் உருளைக்கிழங்கு பஜ்ஜி, சிக்கன் பஜ்ஜிகளை சாப்பிடுவார்கள். அதேசமயம் பெரும்பாலான பஜ்ஜிகள் பழையதாக இருக்கலாம். பழைய எண்ணெயில் சுட்டதாக இருக்கலாம். இதுபோன்ற உணவுகள் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு கெட்டுப்போகலாம். இவற்றை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.  
  • காய்கறி அல்லது பழச்சாறுகளை மதிய உணவின் போது குடித்தால், வயிற்றில் வாயுவை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, அவ்வாறு குடிக்கும் பழச்சாறு அல்லது காய்கறி சாறுகள் ஆரோக்கியமானதாக அல்லாமல் அர்க்கரை, எசன்ஸ் என தேவையற்றதை சேர்த்து அதன் ஆரோக்கியத்தை கெடுக்கலாம். சில சமயங்களில் அதில் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் கூட ஹெபடைடிஸை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.