சீனாவின்
விவோ
நிறுவனம் இந்தியாவில் தனது பிரீமியம் பிளாக்ஷிப் போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. அதன்படி, தனது
Vivo
X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியது.
இரண்டு மாடல்களில் இந்த போன்கள் வெளியாகி இருக்கின்றன. ஒன்று Vivo X80 5G ஆகவும், மற்றொன்று
Vivo X80 Pro 5G
ஆகவும் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களில் Zeiss ஆப்டிகல் லென்ஸ் கேமரா உள்ளது. கேமரா திறனை மேம்படுத்த V1+ சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ் 80 சீரிஸ் விலை (vivo x80 price flipkart)
விவோ எக்ஸ் 80 5ஜி ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், அர்பன் ப்ளூ ஆகிய இரு நிறங்களிலும், விவோ எக்ஸ் 80 ப்ரோ 5ஜி போன் காஸ்மிக் பிளாக் நிறத்திலும் விற்பனைக்கு வருகிறது.
இரண்டு வேரியண்டுகளில் களமிறங்கும் எக்ஸ் 80 மாடலின் 8GB+128GB விலை ரூ.54,999 ஆகவும், 12GB+256GB வேரியண்டின் விலை ரூ.59,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12GB+256GB எனும் ஒரே வேரியண்டில் விற்பனைக்கு வரும் எக்ஸ் 80 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.79,999 ஆக உள்ளது.
WhatsApp Groups: இனி வாட்ஸ்அப் குழுவில் இருந்து ரகசியமாக வெளியேறலாம்!
இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன்களை Flipkart ஷாப்பிங் தளம், விவோ இணையதளம், சில்லறை விற்பனை கடைகள் ஆகிவற்றின் வாயிலாக முன்பதிவு செய்ய முடியும்.
பிரீமியம் விவோ போன்களின் விற்பனை மே 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.7000 வரை கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% விழுக்காடு வரை தள்ளுபடி கிடைக்கிறது.
விவோ எக்ஸ் 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo X80 Pro 5g Specifications)
புதிய விவோ பிளாக்ஷிப் போனில் 6.7″ இன்ச் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் E4 AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch ஸ்கின் இதை இயக்குகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 1) நிறுவப்பட்டுள்ளது.
இதில் 50MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 48MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 12MP மெகாபிக்சல் போர்ட்ரேட் லென்ஸ் கிம்பல் ஸ்டெபிலைசேஷனுடன் டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெரிஸ்கோப் கேமராவுடன் 60X வரை சூம் செய்ய முடியும் என்று விவோ தெரிவித்துள்ளது.
முன்பக்க டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 32MP மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,500mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 80W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதனுடன் வருகிறது.
விவோ எக்ஸ் 80 5ஜி அம்சங்கள் (Vivo X80 5g Specifications)
விவோ எக்ஸ் 80 ப்ரோ போனில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இதில் உள்ளது. ஆனால் விலை குறைவான பிளாக்ஷிப் இது என்பதால், இந்த போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 (Mediatek Dimensity 9000) புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
விவோ எக்ஸ் 80 கேமராவைப் பொருத்தவரை, 50MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 12MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை கொண்ட டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 32MP மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்:
Samsung TV: இலவசமாக சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க இதுதான் ஒரே வழி!Viral Video: ட்விட்டர் மீது கடும் தாக்கு – பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்ட ஊழியர்!Elon Musk: எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் அனுப்பிய லீகல் நோட்டீஸ் – ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா?