சென்னை: எவ்வித காரணமும் கூறாமல் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா இன்று பழனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் எஸ்.பியான் தான் கைது செய்து செய்யப்பட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன்.
(சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்.
— H Raja (@HRajaBJP) May 18, 2022
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்.பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன்.(சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.