இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் சரிவினைக் காணலாம் என எஸ் & பி குளோபல் ரேட்டிங்க்ஸ் கணித்துள்ளது.
முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 7.8 சதவீதமாக இருக்கலாம் என ஆய்வு நிறுவனமானது கணித்திருந்தது. இது தற்போது 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.
இது நாட்டில் பணவீக்கமானது உச்சத்தில் உள்ள நிலையில், வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாக்கம்
குறிப்பாக நாட்டில் பல்வேறு கமாடிட்டிகளின் விலை, எரிபொருள் விலை, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என பலவும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், மிக வேகமான வளர்ச்சி கண்டு வரும் நாடாக இருந்து வருகின்றது.
பணவீக்கம்
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ஆக இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு எதிர்பார்ப்பு
நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதமானது, அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் அசாதாரணமான நிலையானது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் எதிர்பார்ப்பு
2021 -2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8.9 சதவீதமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நுகர்வோர் பணவீக்க விகிதமானது 6.9 சதவீதமாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய டெவலப்மெண்ட் வங்கியானது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 7.5 சதவீதமாக கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கணிப்பு
இதே ரிசர்வ் வங்கியானது கடந்த மாதம் 7.8%ல் இருந்து 7.2% ஆக குறைந்தத்து. இது கச்சா எண்ணெய் விலையில் நிலவி வரும் அதிக ஏற்ற இறக்கமானது தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியது.
S&P global Ratings slashed growth rate to 7.3% in current financial year
S&P research firm had forecast that India’s economic growth rate would be 7.8% in the current financial year. It is currently down 7.3%t.