முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மிகவும் மலிவான அரசியல் லாபத்துக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சூழ்நிலைக்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் முடிவு ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.