ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மும்பையின் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திராணி முகர்ஜிக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.