சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை கருத்தை கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார் திமுக எம்.பி செந்தில்குமார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்பே சொல்லியாச்சு
நீங்க யாருங்க Saar ஏற்றுக்கொள்வதற்கும்
ஏற்றுக்கொள்ளாததற்கும்.போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு
கண்ணில் கண்ணீர் வர வரைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க.
Ooh no மீசையும் இல்லையா.
Cannot help it.
I am extremely sorry. https://t.co/xEPrR5eemB— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 18, 2022
அண்ணாமலை கருத்துக்கு திமுக எம்.பி செந்தில் குமார் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “தீர்ப்பே சொல்லியாச்சு, நீங்க யாருங்க சார் ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாததற்கும். போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு, கண்ணில் கண்ணீர் வர வரைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. Ooh no மீசையும் இல்லையா. Cannot help it. I am extremely sorry” என்று குறிப்பிட்டுள்ளார்.