தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் கூறியுள்ள பேரறிவாளன், விடுதலை கிடைத்துள்ளதால் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜுவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான அவர், மரண தண்டனையே கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறிய அவரது தாயார் அற்புதம்மாள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார்.