திருப்பூர் அருகே வெட்டிய மாமரக்கிளை பகுதியிலிருந்து கொத்துக்கொத்தாக மாங்கனிகள் காய்த்திருப்பது பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வெட்டிய மரக்கிளையில் இருந்து மாங்கனிகள் காய்த்து வருவதை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.
மலையாண்டி பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்ம்மாள் என்பவர், சிவன் கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். இந்த கோவிலின் அருகே மாமரம் ஒன்று இருந்தது.
இந்நிலையில், கோவில் விரிவாக்கப் பணிக்காக அந்த மாமரத்தின் சில கிளைகளை வெட்டி உள்ளனர். சில மாதங்களுக்குப் பின்னர் வெட்டிய கிளை பகுதியிலிருந்து மாங்காய் காய்த்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள் இந்த மாங்கனிகளை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
சிவன் கோயில் இருப்பதால், சிவன் அருளால் இதுபோல் அரங்கேறி உள்ளதாகவும் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.