கொழும்பு,
இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது முடிவுக்கு வந்தது. இந்தப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தமிழர்கள் கொத்து கொத்தாய் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந் தேதியை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவு தினமாகவும், சிங்களர்கள் வெற்றி தினமாகவும் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, மே 18-ந் தேதி (நேற்று) உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், சிங்களர்களும் ( அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள்) நினைவஞ்சலி செலுத்தினர். அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அலுவலகத்துக்கு வெளியே கூடிய போராட்டக்காரர்கள் , உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்ட தமிழர்கள், காணாமல் போன தமிழர்களுக்காகவும் நினைவஞ்சலி செலுத்தியதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.