சென்னையில் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வில்லிவாக்கம், ராஜாஜி நகர் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திலகராஜ் என்பவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை அணிந்திருந்த தங்க நகையை பறித்துச் சென்றது.
இதேபோல வினோத் என்பவரின் தங்கச் சங்கிலியையும் இந்த வழிப்பறி கும்பல் பறித்து சென்றுள்ளது.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை குறிவைத்து இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.