‛ரஜினி 169' எப்போது ஆரம்பம்
‛அண்ணாத்த' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். ரஜினி தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தான் துவங்கும் என தகவல் பரவியது. ஆனால் முதலில் திட்டமிட்டப்படி ஜூலையிலேயே படத்தை ஆரம்பிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.