ரஷ்யா வெற்றிகரமாக லேசர் ஆயுத பரிசோதனையை நடத்தியுள்ளது. இந்த ஆயுதத்தால் சாட்டிலைட்டுகளையும் டிரோன்களையும் தாக்கி அழிக்க முடியும்.
1500 கிலோமீட்டர் பூமிக்கு மேல் நோக்கிப் பாய்ந்து செயற்கைக் கோள்களை இந்த லேசர் ஆயுதம் மூலம் செயலிழக்க வைக்க முடியும். 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஏவி டிரோன்களை வீழ்த்த முடியும்.
பெரஸ்வெட் என்று அழைக்கப்படும் இந்த ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந்நாடு அறிவித்தது. இந்த ரகசிய திட்டத்தை அந்நாட்டு துணை பிரதமர் யூரி போரிஸ்ஸோவ் தலைமையில் நிறைவேற்றியுள்ளனர்.