நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது நிலவும் நிலைமைகள் காரணமாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.