இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கiடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் (19) இன்றாகும்.
முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட் இழப்புக்கு 385 ஓட்டங்களை எடுத்திருந்தது.
3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 15 ஆம் திகதி சட்டோகிராமில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 153 ஓவரில் 397 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் (16) இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்கள் எடுத்திருந்தது.