தேவதை போல் ஜொலிக்கும் யமுனா சின்னத்துரை
சினிமாவில் அறிமுகமான யமுனா சின்னத்துரைக்கு திரைத்துறையில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் கவனம் செலுத்திய அவருக்கு, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடர், தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதனையடுத்து யமுனாவை பலரும் இன்ஸ்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர். அடுத்த ப்ராஜெக்டிற்காக காத்திருக்கும் யமுனா சின்னத்துரை அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லெஹங்காவில் தேவதை போல் ஜொலிக்கும் யமுனாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.