கர்நாடக மாநிலம் பெங்களூரூ பிஷப் கார்டன் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தலை முடி பிடித்து சண்டை போடும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு மாணவிகளின் பெற்றோர்களும் காரணமென கூறப்படுகிறது. என்ன பிரச்னைக்காக மாணவிகள் இடையே இந்த குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் சம்பவம் குறித்து பெற்றோர்களோ அல்லது பள்ளி ஆசிரியர்களோ சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் சண்டையால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.