How to make Ribbon Pakoda with Idli batter simple recipe in Tamil: இன்றைய கால கட்டத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் எல்லோரும் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புகிறோம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது, மிக்சர், காரசேவ், பக்கோடா போன்றவை தான். இவற்றின் தனித்துவமான ருசிக்காகவே இதனை எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இவற்றில் ரிப்பன் பக்கோடா பெரும்பாலானோருக்கு பேவரைட் ஸ்நாக்ஸ். ஆனால் இந்த ரிப்பன் பக்கோடாவை நீங்கள் இனி கடைகளில் வாங்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டே எளிமையாக இந்த ரிப்பன் பக்கோடாவைச் செய்யலாம். செலவு குறைவு. டேஸ்ட் அதிகம். இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கெட்டியான இட்லி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
தண்ணீர் ஊற்றாத கெட்டியான இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த பொட்டுக்கடலை மாவை இட்லி மாவில் சேர்த்து நன்கு பிசைந்து கெட்டியான பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி.
அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: 2 நாள் வரை சாஃப்ட்… ஒரு முறையாவது சப்பாத்தி இப்படி செய்யுங்க!
பின்னர், முறுக்கு அச்சு எடுத்து அதில் ரிப்பன் பக்கோடா அச்சு வைத்து ஒரு உருண்டை மாவை அதில் வைத்து காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடுங்கள்.
அவை பொன்னிறமாக வெந்து வந்ததும் லாவகமாக எடுத்து கிண்ணத்தில் போடுங்கள். அவ்வளவுதான் ரிப்பன் பக்கோடா தயார்.
இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை, நீங்களே உங்கள் செய்து சாப்பிடுங்கள்.