தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. எவ்வளவு குறைஞ்சிருக்குன்னு பாருங்க!

தங்கத்தினை பிடிக்காத பெண்கள் இந்தியாவில் இருப்பது கடினம். இந்தியாவை பொறுத்த வரையில் பிறப்பு முதல் இறப்பு வரையில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உலோகம் தங்கம்.

எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாதுகாப்பு புகலிடம் ஆகும். இது வெறுமனே தங்க ஆபரணம், தங்க காயின், பார்கள் என அல்லாமல், கோல்டு இடிஎஃப், தங்க பத்திரம், கமாடிட்டி சந்தையில் தங்கம் என பல வகையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண சந்தை என்ன நிலவரம் வாருங்கள் பார்க்கலாம்.

பிஎப் பயனாளிகளுக்கு எச்சரிக்கை.. இந்த தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 50,000 ரூபாய்க்கு கீழாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது வலுவான பத்திர சந்தைக்கு மத்தியில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் எதிரொலித்துள்ளது.

டாலர் மதிப்பில் அழுத்தம்

டாலர் மதிப்பில் அழுத்தம்

எப்படியிருப்பினும் வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்படும் நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் டாலரில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டியை அதிகரிக்க வழிவகுக்கலாம்
 

வட்டியை அதிகரிக்க வழிவகுக்கலாம்

டாலர் மதிப்பு சரிவால் மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கம் விலையானது குறைவாக தோன்றலாம். இது தங்கத்தில் முதலீட்டினை கவரலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் என கூறியிருந்தார். இது நிச்சயம் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 9.14 டாலர் குறைந்து, 1809.76 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது குறைந்த விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 21.608 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை கீழாக கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 201 ரூபாய் குறைந்து, 49,958 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 332 ரூபாய் குறைந்து, 60,824 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 36 ரூபாய் குறைந்து, 4728 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, 37,824 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இது 39 ரூபாய் குறைந்து, 5158 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 41,264 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,580 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on may 18th 2022: gold prices trade below Rs.50,000 amid higher bond yields

Today the price of gold is lower in both the international market and the Indian market.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.