லக்னோ : ‘முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து, தங்கள் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்’ என, மத்திய, மாநில அரசுகளுக்கு முஸ்லிம் தனி சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் தலைநகர், லக்னோவில், முஸ்லிம் தனி சட்ட வாரிய உறுப்பினர் காசிம் ரசூல் இல்யாஸ் கூறியதாவது: நாட்டில் முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது, குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது நேரடி தாக்குதலாக இல்லாமல், நீதிமன்றங்கள் வாயிலாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இதில், தங்கள் நிலையை மத்திய, மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்களில் பிரச்னையை ஏற்படுத்தி, நாட்டின் ஒற்றுமையை சீரழிக்க, சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை கண்டித்து, நாடு முழுதும் போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ : ‘முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து, தங்கள் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்’ என, மத்திய, மாநில அரசுகளுக்கு முஸ்லிம் தனி சட்ட வாரியம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.