பிரித்தானியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா? விளாடிமிர் புடின் விளக்கம்


உறுதியான நிலைப்பாடு ஏதுமற்றவராக இருந்தாலும் தற்போதைய சூழலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதம் ஏதும் பயன்படுத்த வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், உலக நாடுகளின் கோபத்திற்கு இலக்காகி வருகிறார் விளாடிமிர் புடின்.
மட்டுமின்றி, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை தமது எதிரிகள் என்றே விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுதங்கல் வழங்குவதை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

பிரித்தானியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா? விளாடிமிர் புடின் விளக்கம்

இந்த நாடுகளின் அதி நவீன ஆயுதங்களால் ரஷ்ய துருப்புகள் கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருவதுடன், இராணுவ தளவாடங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, ரஷ்ய ஊடகம் ஒன்று பிரித்தானியா மீது விளாடிமிர் புடினால் அணு ஆயுதம் பயன்படுத்த முடியும் எனவும், அதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது எனவும் விமர்சித்திருந்தது.

ஆனால், விளாடிமிர் புடினே கடந்த 2018ல் அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
அதில், அணுசக்தி யுத்தம் ரஷ்யா அல்லது உலக நலன்களுக்கு உகந்தது அல்ல என்பது தமக்குத் தெரியும். என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதன் பின்விளைவுகளை தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற ஏதாவது நடந்தால், இது முழு நாகரிகத்தின் சரிவுக்கு வழிவகுக்கும் என்பதுடம் ஒருவேளை நமது பூமிக்கே ஆபத்தாக அது முடியலாம் என்றார்.

பிரித்தானியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா? விளாடிமிர் புடின் விளக்கம்

பிரித்தானியாவை விட பல எண்ணிக்கையிலான அணு ஆயுத குவியல் ரஷ்யாவிடம் இருந்தாலும், விளாடிமிர் புடின் அதை பயன்படுத்த தயங்குவார் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யாவிடம் தற்போது 4,447 அணு ஆயுத குவியல் உள்ளது. இதில் 1,588 எண்ணிக்கை ஏவுகணைகளாகவும் வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்த முடியும்.

உலகிலேயே ரஷ்யாவில் தான் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் கையிருப்பு உள்ளது. இந்த வரிசையில் 225 அணு ஆயுதங்களுடன் பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.