அமெரிக்காவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தியது, ஆனாலும் எரிபொருள் விலை உயர்வால் தொடர்ந்து விலைவாசி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ் அண்ட் பி குறியீடுகள் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான Target Corp இன் எரிபொருள் விலை உயர்வாலும், செலவுகள் அதிகரிப்பாலும் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் லாபம் பாதியாகக் குறைந்த நிலையில் இந்நிறுவன பங்குகள் 25.1% சரிந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்க ரீடைல் நிறுவனங்களும் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்தது.
அமெரிக்கச் சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக வியாழக்கிழமை ஆசிய சந்தை மொத்தமும் சரிந்து மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கி 30 நிமிடத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளை இழந்து 3 நாள் உயர்வை மொத்தமாக இழந்துவிட்டது.
Sensex nifty live updates 19 may 2022: itc godrej consumer tesla elon musk lic share price covid lockdown brent crude bitcoin gold rate
Sensex nifty live updates 19 may 2022: itc godrej consumer tesla elon musk lic share price covid lockdown brent crude bitcoin gold rate 1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..!