உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இந்தி பதிப்பு ட்ரெயிலர், இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் டீசர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசன் எழுதி பாடி அண்மையில் ‘பத்தல பத்தல’ பாடல் வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே, ஆண்டவர் கம்பேக் என்ற லெவலில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து கொண்டாடப்பட்டாலும், மத்திய அரசை விமர்சிப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘விக்ரம்’ பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘காடுனு ஒன்னு இருந்தா’ என்று கமல் பேசும் வசனத்தோடு ஆரம்பித்த இந்தப் படத்தின் ட்ரெயிலர், ஆக்ஷன் காட்சிகளுடன் மிரட்டலாக இருந்தது. இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் இந்தி ட்ரெயிலர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தின் இந்தி புரமோஷனுக்காக, பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கபில் சர்மா ஷோ’ -வில், நடிகர் கமல் கலந்துகொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
The stunnin’ gunnin’ #VikramHitlist Hindi Trailer releasing tomorrow at 12 noon !#KamalHaasan #VikramFromJune3 #VikramHitlistTrailer @ikamalhaasan @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @PenMovies @jayantilalgada @turmericmediaTM pic.twitter.com/Rt1U4FLjkH
— Raaj Kamal Films International (@RKFI) May 18, 2022