`வெப்ப அலை இன்னும் அதிகரிக்கும்’- மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லியில் மீண்டும் வெப்ப அலை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி அனல் காற்று வீசி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் நாடு முழுவதும் வெப்ப நிலை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதில் தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வெப்ப அலை தாக்கம் தற்போது மிக அதிக அளவில் உள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவாக டெல்லியில் 48℃ வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
image
கடந்த திங்கட்கிழமை (மே 16) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜெனமணி, “இந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார். வரும் நாள்களில் இது இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், குறிப்பாக டெல்லி மற்றும் டெல்லியை ஒட்டிய மாநிலங்களில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் வெப்ப அலை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
image
இதையும் படிங்க… கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
வெப்ப அலை பாதிப்பு காரணமாக, இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதும், அதன் காரணமாக கோதுமை மீதான ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அசாம், அருணாச்சல் பிரதேசம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.