பிரிட்டன் அரசை மிரட்டும் ரெசிஷன்.. 40 ஆண்டு மோசமான நிலை..!

வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலைகள் உயர்ந்து உள்ளது. இந்த அதிகப்படியான விலைவாசிக்கு முக்கியக் காரணம் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான்.

இதனால் பிரிட்டன் நாட்டில் மக்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் தள்ளும் நிலை உருவாகியுள்ளது.

2 வருடத்தில் இல்லாத அளவு மோசமான 1 நாள் சரிவு.. அமெரிக்க சந்தையில் என்ன தான் நடக்குது?

 பிரிட்டன் பணவீக்கம்

பிரிட்டன் பணவீக்கம்

பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டுப் பணவீக்கம் (CPI) ஏப்ரல் மாதத்தில் 9 சதவீதத்தை எட்டியது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை கூறியது, இது மார்ச் மாதத்தில் 7% ஆக இருந்தது. ஏப்ரல் மாத பணவீக்கம் பொருளாதார வல்லுநர்களின் 9.1 சதவீதத்திற்குக் கீழ் இருந்தாலும் 1982 ஆம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, பிரிட்டன் அரசு அனைத்து எரிசக்தி விலைகளையும் அதிகரித்தது. இதனால் மக்கள் ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டி வருகிறது. எரிபொருள் விலை உயர்வு பெரும் பகுதி பணவீக்கத்தை அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது.

எரிவாயு மற்றும் மின்சாரம்
 

எரிவாயு மற்றும் மின்சாரம்

மேலும் பிரிட்டன் அரசு எரிசக்தி மீதான பணிவீக்கம் குறித்த தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதில் எரிவாயுவுக்கான 12 மாத பணவீக்கம் 95.5 சதவீதமாகவும், மின்சாரத்தின் பணவீக்கம் 53.5 சதவீதமாகவும் இருந்தது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாங்க் ஆஃப் இங்கிலாந்து

பாங்க் ஆஃப் இங்கிலாந்து

இதன் வாயிலாகவே ஏப்ரல் மாதத்தில் பிரிட்டன் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது, ONS இன் தலைமைப் பொருளாதார நிபுணர் கிராண்ட் ஃபிட்ஸ்னர் கூறினார்.

பிரிட்டன் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் நுகர்வோர் பணவீக்கம் 10% ஆக உயரும் என்று கணித்துள்ளது.

 5 மடங்கு

5 மடங்கு

இது பாங்க் ஆஃப் இங்கிலாந்து இலக்கு விகிதமான 2% ஐ விட ஐந்து மடங்கு அதிகமாகும். இது 2023 க்குள் இங்கிலாந்து பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் (ரெசிஷன்) தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

ரெசிஷன் வந்தால் கட்டாயம் வர்த்தகம் பாதிப்பது மட்டும் அல்லாமல் உற்பத்தி, நாணய மதிப்பு, வேலைவாய்ப்பு இழப்பு போன்றவையும் அதிகரிக்கும். இதன் மூலம் கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் உருவாகும் நிலை வரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK inflation surges to 40-year high of 9% in April,

UK inflation surges to 40-year high of 9% in April பிரிட்டன் அரசை மிரட்டும் ரெசிஷன்.. 40 ஆண்டு மோசமான நிலை..!

Story first published: Thursday, May 19, 2022, 12:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.