மதுரை: ரூ.1.36 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்கிடம் இருந்து மீட்பு

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொத்தமான 1.36 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1,366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
image
அப்பகுதியை சேர்ந்த இன்னும் சிலர் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை ரூ.3,91,768 செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க… பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசின் வரலாற்று நடவடிக்கையை மறைக்க முடியாது: ஓபிஎஸ்
image
இந்நிலையில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர்.
image
மதுரையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி கோயில் சொத்தை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.