உலகளாவிய அமைதியின்மை, தகராறு ஆகியவற்றின் நடுவில் உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சுவாமி நாராயண் கோவிலில் நடைபெற்ற இளைஞர் முகாமில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, எந்தவொரு சமுதாயத்தின் அடித்தளமும், முன்னேற்றமும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டது எனத் துறவிகளும், நூல்களும் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தில் வேரூன்றிய புதிய சிந்தனையின் மீது புதிய இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.