மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், குள்ளப்பகவுன்பட்டி பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்யும்போது அந்த அரவிந்தன் மற்றும் 17 வயது சிறுவன் 20 நடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுபோதையில் வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு அடித்ததாகவும் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த வாக்குமூலத்தை இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.