ரூ.10,000-ல் கார் தயாரிக்க முடியுமா? ஆனந்த் மஹிந்தராவின் பதிலை பாருங்க!

ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த நகைச்சுவை உணர்வையும் கொண்டவர்.

தான் பார்க்கும் புதுமையான விஷயங்கள், பொழுதுபோக்கு எண்ணங்களை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து அவற்றை வைரல் ஆக்கி, அதன் மூலம் பலருக்கு உதவியும் செய்துள்ளார்.

அன்னையர் தினத்தில் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி.. வாக்குறுதி நிறைவேறியது.. இட்லி பாட்டிக்கு வீடு..!

இந்திய பேட்மிட்டன் அணி

இந்திய பேட்மிட்டன் அணி

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய பேட்மிட்டன் அணி தாமஸ் கோப்பையை வென்றது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மஹிந்தரா குழும நிறுவனர் ஆனந்த் மஹிந்தரா, கிடாம்பி ஸ்ரீகாந்திடம் இருந்து நாம் அணி நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

ரூ.10,000-க்கு கார்

ரூ.10,000-க்கு கார்

ஆனந்த் மஹிந்தராவின் அந்த பதிவில் கருத்து தெரிவித்த ராஜ் ஸ்ரீவஸ்தவா, உங்களால் 10 ஆயிரம் ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.

 

ஆனந்த் மஹிந்தரா பதில்

அந்த கேள்விக்கு சர்வ சாதாரணமாகப் பதில் அளித்த 67 வயதான ஆனந்த் மஹிந்த்ரா, அமேசான் இ-காமர்ஸ் தளத்திலிருந்து புகைப்படத்தைப் பகிர்ந்து, நாங்கள் அதை விட விலை குறைவாக, 1500 ரூபாய்க்குள் காரை உருவாக்கியுள்ளோம் என கூறினார்.

மினியேச்சர்

மினியேச்சர்

மஹிந்தார நிறுவனத்தின் தார் மாடல் ஜீப் வாகனத்தின் மினியேச்சர் தான் அது. வீட்டை அலங்கரிக்க விரும்புபவர்கள், சிறுவர்கள் விளையாட எல்லாம் அந்த மினியேச்சரை வாங்குவார்கள். ஆனந்த் மஹிந்தராவின் இந்த பதிவை இப்போது பலரும் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோமெட்டிக் காரை ஸ்டார்ட் செய்துவிட்டல், தூங்கிக்கொண்டே அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிடலாம் என எலன் மஸ்க் தெரிவித்து இருந்தார். அதற்கு ஆனந்த் மஹிந்தரா, மாட்டு வண்டியில் தூங்கிக்கொண்டே ஒருவர் செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்து இதுதான் உண்மையாக டெஸ்லா வாகனம் என தெரிவித்து இருந்தார். மஹிந்தராவின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

ஜொமாட்டோ

ஜொமாட்டோ

10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்ய உள்ளோம் என ஜொமாட்டோ நிறுவனம் கூறிய உடன் அதற்கு முதல் ஆளாகக் குரல் கொடுத்த மஹிந்தரா, இது மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இருந்தார்.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் போர் காரணமாக அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பை படித்து வந்த மாணவர்கள் சிரமமான சூழலால் வெளியேறினர். பிரதமர் மோடி தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனந்த் மஹிந்தராவும் நாம் ஏன் மருத்துவக் கல்லூரி திறக்கக் கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார்.

இட்லி பாட்டி

இட்லி பாட்டி

இப்படி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து அவ்வப்போது வைரல் ஆகுவார் மஹிந்தாரா. தமிழ்நாட்டில் 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு எரிவாயு இணைப்பு பெற உதவியதுடன், அவருக்குச் சொந்த வீடும் கட்டிக்கொடுத்துள்ளார் ஆனந்த் மஹிந்தரா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anand Mahindra’s Casual Reply TO Man Who Asked “Can You Make Mahindra Cars For 10k ?”!

Anand Mahindra’s Casual Reply TO Man Who Asked “Can You Make Mahindra Cars For 10k ?”! | ரூ.10,000-ல் கார் தயாரிக்க முடியுமா? ஆனந்த் மஹிந்தாவின் பதிலை பாருங்க!

Story first published: Thursday, May 19, 2022, 14:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.