சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் கடுமையான ஊரங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர நிர்வாக பணியாளர்கள் முழு கவச உடையணிந்து சென்று பொருட்களை விநியோகம் செய்தனர்.
சாவோயங் (Chaoyang) மாவட்டத்தில் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.