காரைக்கால்: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். காரைக்காலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சம்பந்தப்பட்ட மாநில ஆளுநருக்கான உத்தரவா என்றும் தெரியாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல இயலாது என்று கூறினார்.