தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பேரறிவாளன் விடுதலை… மாநில உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றியா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Advice Avvaiyar
மாநில உரிமைகளுக்குப் கிடைத்த வெற்றி என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதை விட நீண்ட காலம்,பொறுமை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ,விடாமுயற்சியுடன் போராடிய ஒரு தாயின் பாசம் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல, பார்க்க வேண்டும். கடவுளே வந்து தீர்ப்பு சொன்னதுபோல நடந்து இருப்பதை மகிழ்வுடன் ஏற்று மனநிம்மதி அடையும் நேரம் இது. நீதியின் மேல் வைத்த நம்பிக்கை ஜெயித்து, புது தெம்பு கிடைத்து இருக்கிறது. நியாயங்கள் என்றும் தோற்றுப்போகவே கூடாது. நீதி கிடைத்து விடும் என்று காத்திருந்த அன்னையின் மனம் நிம்மதி அடையட்டும் இந்த மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும்
Nellai D Muthuselvam
மாநில அரசினுடைய தீர்மானம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காகத்தான் தீர்ப்பு மனுதாரர் பக்கம் போய் விட்டது . கால தாமதமும் , வழக்கில் அவரது பங்கையும் பார்த்துதான் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் மாநில அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் , மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தீர வேண்டும் என்பது அல்ல.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு வழக்கு பல ஆளுநர்கள் , குடியரசுத் தலைவர்களை பார்த்து விட்டது. குற்றவாளிகளை விடுவிக்க தயங்க காரணங்கள் ஒன்று அரசியல் இன்னொன்று பாதுகாப்பு சம்பந்தமானது. திட்டமிட்டே பல நாச வேலைகள் செய்தவர்கள் எழுவர் விடுதலையை எதிர்நோக்கி உள்ளனர். அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் இது பேரறிவாளனுக்கு மட்டும் தான் பொருந்தும்.
Mani Maran
தமிழக மண்ணில் ஒரு நாட்டின் பிரதமர் உட்பட 17 உயிர்களை அதில் (13 பேர் தமிழர்கள்)பயங்கரவாத தாக்குதல் நடத்தி கொன்று குவித்தவர்களுக்கு போராடி விடுதலை வாங்கி கொடுப்பது மாநில உரிமையா இல்லை போராடி விடுதலை வாங்கி கொடுப்பது மாநில உரிமையா???
BabuMohamed
ஆம்…மாநில உரிமைக்கு.. கிடைத்த.. வெற்றிதான்.. இல்லேன்னா… ஒரேநாடு ஒரேதீர்ப்புன்னு சட்டம் கொண்டு வந்தாலும்கொண்டு வந்துருவாங்க…! “.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM