திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, செய்தியாளர் எழுப்பிய திமுக ஆட்சியில் விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியமால் புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவின் மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி எம்பி சண்மூக சுந்தரம், சேலம் எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் நேற்று (மே 18) டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்தனர். அவரிடம், பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு, உரிய தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்தனர்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்த பிறகு, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.கள் குழு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் திமுக எம்.பி கனிமொழியிடம், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறினீர்கள். இப்பொழுது, திமுக ஆட்சியில் விதவைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, இது என்ன கேள்வி என்று மழுப்பலாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனாலும், விடாத அந்த செய்தியாளர், மேடம் உங்களிடம் ஒரு கேள்வி என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கேட்க, இதற்கு மேல் இங்கே இருந்தால், சிக்கலான கேள்வியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கனிமொழியும் ஜோதிமணியும் அங்கிருந்து வேகமாக தங்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
திமுக எம்.பி கனிமொழியும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக ஆட்சியில் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக கூறினீர்கள், இப்போது திமுக ஆட்சியில் விதவைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கனிமொழியும் ஜோதிமணியும் தெறித்து ஓட்டம் எடுத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது, கனிமொழி பேசிய வீடியோவையும் தற்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சென்ற வீடியோவையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
“அதிமுக ஆட்சியில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. இங்கே குடிப்பழக்கம் மதுவுக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதைப் பற்றி இந்த அரசாங்கத்துகு அக்கறை இல்லை, கவலை இல்லை.” என்று முன்பு கனிமொழி விமர்சித்து பேசியிருந்தார்.
இப்போது திமுக ஆட்சியில் இளம் விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா என்ற கேள்விக்கு கனிமொழி பதிலளிக்க மறுத்து தெறித்து ஓடியது குறித்து, கிராமத்தான் என்ற பெயரில் உள்ள ஒரு நெட்டிசன், “எவனோ ஒருத்தன் நல்லா நாக்க புடுங்கற மாதிரி ஒரு கேள்வி கேட்டான். எடுத்தோம் பாரு ஓட்டம் பாராளுமன்ற கேட்டுல வந்துதான் திரும்பி பார்த்தோம்…” என்று கிண்டல் செய்துள்ளார்.
கார்த்திக் என்ற ட்விட்டர் பயனர், “யரு சார் நீங்க?! இப்படி கனிமொழியும் ஜோதிமணியும் பதறி ஓடறாங்க…” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குல்லா பாய்ஸ் 4.0 என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “கேள்வி கேட்டா பதில் சொல்லணும்… பயந்து ஓடுனா எப்படி மேடம்!… இளம் விதவைகள் ஆகுறாங்களா இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிமொழி பதிலளிக்க மறுத்து புறப்பட்டு சென்ற வீடியோவைப் பதிவிட்டு வேல்முருகன் ஏவிஎம் என்ற ட்விட்டர் பயனர், “இப்போது திமுக ஆட்சியில் விதவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் இளம் விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா என்ற கேள்விக்கு கனிமொழியும் ஜோதிமணியும் பதிலளிக்காமல் தெறித்து ஓட்டம் எடுத்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“