உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதை மேலும் நெருக்கும் விதமாக ரஷ்ய விமான நிறுவனங்கள் மீதும் இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ரூ. 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ?
விமான நிறுவனங்கள்
இங்கிலாந்து அரசு விதித்துள்ள இந்த தடையால், ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான யூரல் ஏர்லைன்ஸ், ரோசியா ஏர்லைன்ஸ், ரஷ்ய அரசின் ஏரோஃப்ளோட் உள்ளிட்ட நிறுவனங்களால் இங்கிலாந்து விமான நிலையங்களில் உள்ள இறங்கும் இடங்களைப் பயன்படுத்த முடியாது, விற்கவும் முடியாது.
காட்டுமிராண்டித் தனம்
ரஷ்யா, உக்ரைன் மீதான காட்டுமிராண்டித் தனத்தைத் தொடரும் வரை, அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடருவோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரூஸ் கூறியுள்ளார்.
வான் பரப்பு
இங்கிலாந்து ஏற்கனவே ரஷ்யா விமானங்கள் இங்கிலாந்து வான் பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இப்போது ரஷ்ய விமான நிறுவனங்களால் இங்கு அவர்களுக்கு உள்ள சொத்துக்களையும் விற்க முடியாது. இவற்றின் மதிப்பு 50 மில்லியன் யூரோக்களாக இருக்கும்.
இங்கிலாந்து
உக்ரைன் மீது போரை தொடங்கிய உடன் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த முதல் நாடு இங்கிலாந்து. சர்வதேச வர்த்தகத்தை ரஷ்யா தொடருவதிலிருந்து கட்டுப்பாடு விதிக்கும் விதமாக இந்த தடையை இங்கிலாந்து போட்டுள்ளது. எனவே உலக நாடுகளுக்கு ரஷ்ய பொருட்களை ஏற்றுமதி செய்வதும், ரஷ்யாவில் செய்ய வேண்டிய இறக்குமதிகளும் பாதிப்படையும்.
கடற் பகுதி
வான் பகுதி மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்குச் சொந்தமான கடற்பகுதியையும் ரஷ்யா பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள் உக்ரைன் போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு
ரஷ்யாவில் பல ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ட்ரோன்கள் உட்பட ரஷ்யாவின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வாகன உற்பத்தி 80 சதவீதம் வரை சரிந்துள்ளது. ராணுவத்துக்குத் தேவையான வாகனங்களைக் கூட ரஷ்யாவால் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி வருகிறது.
எண்ணெய் ஏற்றுமதி
ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை அளிப்பதாகக் கூறியும் வாங்க ஆட்கள் இல்லை. ரஷ்யாவில் மிகப் பெரிய ரெசசன் வரும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அங்கு பலர் வேலையை இழப்பார்கள். ரஷ்யாவால் நீண்ட காலத்திற்கு இதிலிருந்து வெளியில் வர முடியாது என கூறுகின்றனர்.
பொருளாதார நிலை
ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தால் 2023-ம் ஆண்டு அவர்களது பொருளாதாரம் 2.3 சதவீதமாகச் சரியும் என ஐஎம்எப் கணித்துள்ளது. ரஷ்யாவின் இந்த போரால் உலக நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
UK’s New Sanctions Targets Russian Airlines
UK’s New Sanctions Targets Russian Airlines | ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க விமான நிறுவனங்களுக்குத் தடை விதித்த இங்கிலாந்து!